செய்திகள்
கொவிட் தொற்றை கட்டுப்படுத்த புதிய மாத்திரை கண்டுபிடிப்பு!
கொவிட் தொற்றுநோயின் மூன்றாவது அலை பெரிதாக உருவாகி உள்ளதால் பூஸ்டர் தடுப்பூசிகளை வழங்குதல் மற்றும் புதிய வாய்வழி கொவிட் மாத்திரைகளின் பயன்பாடு குறித்து விவாதங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதனிடையில், கொவிட் தொற்றினை கையாள கொவிட் மாத்திரைகள் பரிந்துரைக்கப்பட்டாலும் இதன் பயன்பாடுகள் குறித்து வைத்திய வல்லுநர்கள் சந்தேகம் கொண்டுள்ளனர்.
அதாவது, கொவிட் மாத்திரைகள் குறிப்பாக பாகஸ்லோவிட் , மோல்னுபிரவீர், பைசர் மற்றும் மெர்க் ஆகியன புதிய கொவிட் சிகிச்சையில் உறுதியளிக்கும் வைரஸ் தடுப்பு மருந்துகள் ஆகும். அதனை நோயாளிகள் வீட்டில் இருந்தபடியே எடுத்துக்கொள்ளலாம்.
இதில் கொவிட் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் மோனோக்ளோனஸ் ஆன்டிபாடிகளின் அதே நுட்பத்தையே இம் மாத்திரைகளும் பயன்படுத்துகின்றன. தற்போது இவ் கொவிட் மாத்திரைகளின் விலை உயர்ந்து காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும், கொவிட் நேர்மறை அறிகுறிகளை பரிசோதித்த மூன்று முதல் நான்கு நாட்களுக்குள் நோய்த்தொற்றின் முன்னேற்றத்தை தடுக்கலாம், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதை தவிர்க்கலாம். மிக முக்கியமாக இம் மாத்திரைகளின் மூலம் வைரஸை குறைக்கலாம் என்று தொற்று நோய் நிபுணர் டாக்டர் அனுப் வாரியர் கூறியுள்ளார்.
கொவிட் சிகிச்சைக்காக இங்கிலாந்தில் அங்கிகரிக்கப்பட்ட முதல் கொவிட் எதிர்ப்பு மாத்திரையான மோல்னுபிராவிரை பயன்படுத்த இங்கிலாந்து மட்டுமே ஒப்புதல் அளித்துள்ளது. இம் மாத்திரைகள் இறப்பு விகிதத்தை 90 சதவீதம் கட்டுப்படுத்துவதாக கூறப்பட்டாலும் அதனை உத்தியோகப்பூர்வமாக உறுதியளிக்கின்ற தரவுகள் இன்னும் முழுமையாக வெளியிடப்படவில்லை.
ஆகவே, இந்த மாத்திரைகளை நாம் முழுமையாக நம்பமுடியாது. காரணம் மாத்திரைகள் எச்.ஐ.வி மருந்துகளைப் போலவே இருக்கின்றன. எனவே கல்லீரல் செயலிழக்க கூடிய வாய்ப்புகள் அதிகம் ஆகவே உடற் பாகங்களை கண்காணித்தல் அவசியம். ஏனெனில் இது தாக்கத்தை ஏற்படுத்தும்.
எனவே,மாத்திரைகளை விட தடுப்பூசிகளுக்கு அதிக முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் அதன் நடவடிக்கைகள் வலுப்படுத்த வேண்டும் என நிபுணர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
#world
You must be logged in to post a comment Login