செய்திகள்
சீனாவின் சேதனப்பசளை விவகாரம்: மெதுவாகப் பின்வாங்கும் இலங்கை!-
சீன நிறுவன விவாகரத்தில் இருந்து மெதுவாகப் பின்வாங்குவதற்கு இலங்கை அரசு முடிவெடுத்துள்ளது.
சீனாவின் சேதனப்பசளைக் கப்பல் தொடா்பில், சீன நிறுவனம் கோரிய நிதியில் 75 சதவீதத்தை அதாவது 6.7மில்லியன் அமெரிக்க டொலர்களைச் செலுத்தி முரண்பாட்டில் இருந்து வெளியேறுவதற்கான முயற்சியில் இலங்கை இறங்கியுள்ளது.
இந்தநிலையில் புதிய பசளைகளைக் கொள்வனவு செய்யவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே கொழும்பின் ஊடகம் ஒன்றிடம் தொிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்;
இந்த விவகாரத்தினால் ராஜதந்திர உறவுகளை பாதிக்க இடமளிக்கமுடியாது. அனுமதியின்றி இந்தக்கப்பல் வந்துள்ளதாக இலங்கை தரப்பில் கூறப்பட்டது.
வங்கிக்கடன் கடிதம் திறக்கப்பட்டதால், கப்பல் நாட்டிற்கு வந்துள்ளதாக சீன நிறுவனம் கூறியுள்ள நிலையிலேயே தற்போது முரண்பாடு எழுந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை ஒரு மாதத்துக்கும் மேலாக நீடித்து வந்த இந்த முரண்பாட்டைத் தீர்ப்பதற்கு சட்டமா அதிபரின் ஆலோசனை கோரப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.
#SrilankaNews
You must be logged in to post a comment Login