செய்திகள்
சுற்றுலாப் பயணிகளை ஈர்த்த பலூன் திருவிழா!!
வாரணாசியில் இடம்பெற்ற வெப்பக்காற்றுப் பலூன் திருவிழாவில் சுற்றுலாப் பயணிகளை ஈர்த்துள்ளது.
இந்தியாவின் உத்தரப் பிரதேசம் வாரணாசியில் இடம்பெற்ற வெப்பக்காற்றுப் பலூன் திருவிழாவில் சுற்றுலாப் பயணிகள் பங்கேற்றுள்ளனர்.
வாரணாசியில் சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில் அமெரிக்காவின் அல்புகர்க் நகரத்துடன் செய்துகொண்ட உடன்பாட்டின்படி கங்கையாற்றங் கரையில் 03 நாள் வெப்பக் காற்றுத் திருவிழா தொடங்கியுள்ளது.
இந்நிகழ்ச்சியில் 11 பலூன்கள் பறக்க விடப்பட்டுள்ளன.
ஒருவருக்குக் கட்டணம் 500 ரூபாயாகும். ஒரு பலூனில் 5 பேர் வரை ஒரே நேரத்தில் பறக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது
#india
You must be logged in to post a comment Login