செய்திகள்
பங்காளிகளை வெளியேற்ற தயாராகும் மொட்டு கட்சி!
எமது அபிவிருத்தி பயணத்தை குழப்புவதற்கு முற்படும் தரப்புகள் நிச்சயம் விலக்கப்படும். இனி கடுமையான முடிவுகள் எடுக்கப்படும்.”- என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (மொட்டு) பொதுச்செயலாளர் சாகர காரியவசம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” 2022 ஆம் ஆண்டென்பது அபிவிருத்திக்குரிய வருடமாகும். அந்த இலக்கை நோக்கி வேகமாக பயணிப்பதே எமது நோக்கம். அதனை குழப்ப முற்படும் தரப்பு நிச்சயம் விலக்கப்படும். ஆளுங்கட்சியா, எதிரணியா என்பது முக்கியமில்லை. எவர் தடை ஏற்படுத்தினாலும் அது தகர்க்கப்படும்.
எம்மீது நம்பிக்கை வைத்தே மக்கள் வாக்களித்தனர். அந்த நம்பிக்கையை நிச்சயம் நிறைவேற்றுவோம். மக்களுக்கு வழங்கிய உறுதிமொழியை மீற செயற்படமாட்டோம்.”- என்றார்.
அதேவேளை, பங்காளிக்கட்சிகளை அரவணைத்து பயணிக்க வேண்டியது தலைமைக்கட்சியின் பொறுப்பாகும் என மொட்டு கட்சிக்கு பிரதமர் மஹந்த ராஜபக்ச ஆலோசனை வழங்கியிருந்தார். இவ்வாறானதொரு பின்புலத்திலேயே பிரதமரின் அறிவிப்பைகூட சவாலுக்குட்படுத்தும் விதத்தில் மொட்டு கட்சி செயலாளர் கருத்து வெளியிட்டுள்ளார்.
#SriLankaNews
You must be logged in to post a comment Login