செய்திகள்
மீண்டும் ஆரம்பமாகும் வடக்கு மாகாணத்துக்கான ரயில் சேவை
வடக்கு மாகாணத்துக்கான ரயில் சேவைகள், நாளை (16) முதல் மீளவும் ஆரம்பிக்க உள்ளதாக ரயில்வே திணைக்கள பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்தார்.
சீரற்ற வானிலை காரணமாக ரயில் நிலையங்களுக்கு இடையில் வெள்ளம் காரணமாக ரயில் பாதையில் தாழிறக்கம் ஏற்பட்டதால் வடமாகாணத்துக்கான ரயில் சேவைகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன.
நாளை மற்றும் நாளைமறுதினம் வடக்கு மாகாணத்தில் நீண்ட தூர ரயில் சேவைகளுக்கான அட்டவணை வெளியாகியுள்ளது.
செவ்வாய்க்கிழமை (16) கல்கிசை காங்கேசன்துறை கடுகதி ரயில் (கொழும்பு கோட்டையில் இருந்து காலை 5.45க்கு புறப்படும்)
காங்கேசன்துறை கல்கிசை கடுகதி ரயில் (காங்கேசன்துறையில் இருந்து மதியம் 13.15க்கு புறப்படும்)
கல்கிசை காங்கேசன்துறை யாழ்தேவி ரயில் (கொழும்பு கோட்டையில் இருந்து மாலை 6.35க்கு புறப்படும்)
காங்கேசன்துறை கல்கிசை யாழ்தேவி ரயில் (காங்கேசன்துறையில் இருந்து இரவு 9.00க்கு புறப்படும்)
நாளை மறுதினம் புதன்கிழமை கொழும்பு கோட்டை காங்கேசன்துறை (கொழும்பு கோட்டையில் இருந்து புறப்படும் நேரம் 11.50)
காங்கேசன்துறை கொழும்பு கோட்டை நகரங்களுக்கிடையேயான ரயில் (காங்கேசன்துறையில் இருந்து காலை 5.30 புறப்படும்) என ரயில்வே திணைக்களம் அறிவித்தல் விடுத்துள்ளது.
#SriLankaNews
You must be logged in to post a comment Login