செய்திகள்
இறந்தோரை நினைவு கூர நவம்பர் 20: எதிர்கால சந்ததிக்கு தவறாகக் கடத்தும்
தமிழ்த் தேசிய அரசியலுக்காக தம்மைத் தியாகம் செய்த ஆயர்களை உருவாக்கித் தந்த கத்தோலிக்க திருச்சபை இறந்தவர்களை நினைவு கூரும் நாட்களாக நவம்பர் 20ம் திகதியை பொதுமைப்படுத்தும் வகையில் மேற்கொண்ட முடிவு, வரலாற்றை எதிர்கால சந்ததிக்கு தவறாக கடத்துமென பொது அமைப்புக்கள் சில வலியுறுத்தின.
கிராமிய உழைப்பாளர் சங்கம், மாற்றத்திற்கான மாவட்ட இளைஞர் பேரவை மற்றும் வடமராட்சி கிழக்கு பிரஜைகள் குழு உள்ளிட்ட சில அமைப்புகளின் ஏற்பாட்டில் இன்று காலை 11 மணியளவில் தனியார் விடுதியொன்றில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர்கள் இதனை தெரிவித்தனர்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாம் ஆயர்களை எதிர்க்கவில்லை அவர்களை மதிக்கின்றோம். அதே நேரத்தில் நமது மனக்கவலையை நாம் இங்கே தெரிவிக்கின்றோம்.
கத்தோலிக்கர்களிடம் மாத்திரமே நாங்கள் கோரியதாக ஆயர் ஒருவரின் கருத்து பத்திரிகையொன்றில் இன்று வெளியானது.
இது தொடர்பில் ஆயர்கள் தெளிவுபடுத்தி தமது முடிவு தொடர்பில் பரிசீலிக்க வேண்டும்.
தமிழ் மக்களின் கடந்த காலங்களில் மாவீரர் நினைவு நாளை கொண்டாடும் பொழுது ஆலயங்களிலே மணி அடித்து அந்த நிகழ்வுக்கு வலுச் சேர்த்தவர்கள் என்ற வகையில் ஆயர்களுக்கும் கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும் மிகப் பலமான பங்களிப்பு இருக்கிறது.
இந்து ஆலயங்களை விட கிறிஸ்தவ ஆலயங்களை இந்த செயல்பாட்டில் உணர்வுபூர்வமாக பங்கெடுத்துக் கொண்டார்கள்.
ஆகவே வரலாறுகள் மதிக்கப்பட வேண்டும். எந்த இடத்திலும் நாங்கள் அதனை கொச்சைப்படுத்த முடியாது உணர்வு எல்லாரிடத்திலும் இருக்கின்றது.
அந்த நிகழ்வை மாற்றி அமைப்பது என்பது எந்தவகையிலும் ஏற்கமுடியாது என்றனர்.
#SrilankaNews
You must be logged in to post a comment Login