செய்திகள்
பட்ஜெட்: புதிய வியாபாரத்தைப் பதிவு செய்வதற்கு கட்டணம் விதிவிலக்கு!
2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் சமர்க்கப்பட்டது.
இந்தநிலையில் இலங்கையில் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
கொவிட் காரணமாக அனைத்து வருமான வழிமுறைகளும் தடைப்பட்டிருந்தாலும், மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்கவும், சுற்றுலாத் துறையை மேம்படுத்தவும் வாய்ப்பு இருக்கிறது.
இலங்கையில் கொவிட் பரவலைக் கட்டுப்படுத்த பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், கொவிட் பரவலுக்கு முகங்கொடுத்து உள்ளூர் தொழில் முயற்சியாளர்களைப் பாதுகாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவும்.
சர்வதேசப் போதைப்பொருள் கடத்தலுக்கான தளமாக இலங்கையை மாற்றுவதற்கு முன்னெடுக்கப்பட்ட அனைத்து முயற்சிகளும் தடுக்கப்பட்டுள்ளது.
சந்தையில் சேவை மற்றும் பொருட்களின் விலைகளில் தொடர்ந்து ஏற்பட்டுள்ள ஏற்ற இறக்கங்கள் மீள்பரிசீலனை செய்யப்பட வேண்டும் என்றும், பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகளை கட்டுப்படுத்த பாரம்பரிய வழிமுறைகள் போதுமானதாக இல்லை.
இலங்கைப் பொருளாதாரத்தை உற்பத்திப் பொருளாதாரமாக மாற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும், சர்வதேச நாணய நிதியத்துடன் நீண்ட கால வேலைத்திட்டத்தில் ஈடுபடும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை என நிதியமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
வர்த்தக நிலுவை பற்றாக்குறையை ஈடுசெய்வதற்கு சேவைத் துறையிலிருந்து அதிக பங்களிப்பைப் பெறுவதற்கு எதிர்பார்ப்பதாகவும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ குறிப்பிட்டார்.
* சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிறுவனங்களுடன் இணைந்து இலங்கையில் மருந்துவகைகளை உற்பத்தி செய்ய நடவடிக்கை
* ஆடைத்தொழிற்சாலைகளினால் 4 பில்லியன் வருமானம் பெற்றாலும் புடைவைகளை பெற்றுக்கொள்ள 2 பில்லியன் செலவு செய்வதால் தேவையான புடைவைகளை நாட்டுக்குள் உற்பத்தி செய்ய நடவடிக்கை
* தேசிய ஆடை உற்பத்தியில் பற்றிக் ஆடை உற்பத்திகளை அதிகரித்து அதன் ஊடாக
வெளிநாட்டு செலாவணியை பெற்றுக்கொள்ள விசேட வேலைத்திட்டம்
* புதிய வியாபாரத்தை பதிவு செய்வதற்கு அறவிடப்படும் கட்டணத்தை 2022 ஆம் ஆண்டு அறவிடாதிருப்பதற்குத் தீர்மானம்
* வெளிநாட்டிலுள்ள இலங்கையர்கள் மூலம் கிடைக்கும் வெளிநாட்டு செலாவணியை அதிகரிப்பதற்காக தூதுவர்களுடன் கலந்துரையாடி வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை
* மீன் உற்பத்தியை மேம்படுத்துவதற்கு இதுவரை ஒதுக்கப்பட்டுள்ள தொகைக்கு மேலதிகமாக 10 மில்லியன் ஷரூபா நிதி ஒதுக்கீடு..
வரவு செலவுத் திட்டம் மீதான வாசிப்பை உடனுக்குடன் அறிந்துகொள்ள www.tamilnaadi.com
#SriLankaNews
You must be logged in to post a comment Login