செய்திகள்
இஸ்லாம் அல்லாதவர்கள் திருமணம் செய்து கொள்ள அனுமதி!!
அபுதாபியில் இஸ்லாம் அல்லாதவர்கள் திருமணம் செய்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இஸ்லாம் நாடான ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரமான அபுதாபியில் இஸ்லாம் அல்லாதவர்கள் திருமணம் செய்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக்க அரசு ஓர் ஆணையை வெளியிட்டுள்ளது.
இந்த ஆணையின்படி அபுதாபியில் சிவில் சட்டத்தின் கீழ் இஸ்லாம் அல்லாதவர்கள் திருமணம் செய்து கொள்ளவும், விவாகரத்து செய்யவும் மற்றும் விவாகரத்துக்குப் பின்னர் குழந்தைகளை கூட்டு முறையில் பாதுகாத்துக் கொள்வதற்கும் அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளது.
மேலும் விவாகரத்து பெறுபவர்கள் ஜீவனாம்சம் பெறுவதற்கும் இந்த ஆணை வகை செய்கிறது.
மேலும் அபுதாபியில் இஸ்லாம் அல்லாத குடும்ப விவகாரங்களைக் கையாள புதிய நீதிமன்றம் ஒன்று உருவாக்கப்படும் என்றும் அந்த நீதிமன்றம் ஆங்கிலம் மற்றும் அரபு மொழிகளில் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரக அரசு கடந்த ஆண்டு கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில் பல்வேறு சட்டங்களில் மாற்றங்களை அறிமுகம் செய்தது.
இதில் திருமணத்துக்கு முந்தைய பாலியல் உறவுகள், மது அருந்துதல், மற்றும் கெளரவக் கொலைகள் வழக்கில் பல்வேறு விதிகளை இரத்துசெய்தல் உட்பட பல்வேறு மாற்றங்கள் அறிமுகம் செய்யப்பட்டன.
ஐக்கிய அரபு அமீரக கூட்டமைப்பின் தலைவராக உள்ள அபுதாபியின் ஷேக் கலீப் பின் ஜாயேத் அல்-நஹாயன் இதற்கானஅரசாணையை வெளியிட்டுள்ளார். இவரே அந்த நாட்டின் ஆட்சியாளரும், அதிபருக்கான அந்தஸ்தையும் பெற்றுள்ளார்.
இவ் அரச ஆணையால் அங்குள்ள பொதுமக்கள் ஆனந்தமடைந்துள்ளதாக அந்நாட்டுன் ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
#WORLD
You must be logged in to post a comment Login