வாகனங்கள் மோதி கோர விபத்து – 19 பேர் சாவு
மெக்சிகோவில் வாகனங்கள் ஒன்றை ஒன்று மோதியதில் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.
மெக்சிகோவில் வாகனங்கள் ஒன்றை ஒன்று மோதி தீப்பிடித்து எரிந்ததால், அவற்றை அப்புறப்படுத்தும் பணியில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மெக்சிகோவின் , சால்கோ நகராட்சி அருகே உள்ள அதிவேகப் பாதையில் பரவூர்தி ஒன்று பிரேக் பிடிக்காமல் போனதால், எதிரே சென்ற மற்ற வாகனங்கள் மீது மோதியுள்ளது.
இதில், பின்புறம் வந்த வாகனங்கள் அடுத்தடுத்து மோதி பயங்கர விபத்தை ஏற்படுத்தியன.
இந்த கோர விபத்தில் சிக்கி பரவூர்தியின் சாரதி உள்பட 19 பேர் பரிதாபமாக சாவடைந்தனர் .
மேலும், படுகாயம் அடைந்த மூன்று பேரை மீட்டு அருகில் உள்ள வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
இந்த விபத்தில், சில வாகனங்களில் தீப்பிடித்து எரிந்தது.
இந்நிலையில் வாகனங்களை அப்புறப்படுத்தும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
#WORLD