செய்திகள்

மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையின் “சுகம் பேணும் நிலையம்” திறப்பு

Published

on

மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையின் “சுகம் பேணும் நிலையம்” வட்டுக்கோட்டை ஆத்தியடி பிள்ளையார் கோவிலுக்கு அருகாமையில், இன்றையதினம் (06) மாலை 3 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது.

மூளாய் கூட்டுறவு வைத்தியசாலை மற்றும் வட்டுக்கோட்டை சமூகம் ஆகியன இணைந்து இந்த வைத்தியசாலையை ஆரம்பித்து வைத்தன.

மூளாய் – கூட்டுறவு வைத்தியசாலை சங்கத்தின் தலைவர் மா.ஞானேஸ்வரன் அவர்கள் தலைமை தாங்கிய இந்நிகழ்வில் யாழ். பல்கலைக்கழக உபவேந்தர் திரு. சிறீ சற்குணராசா அவர்கள் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு சம்பிரதாயபூர்வமாக வைத்தியசாலையை திறந்துவைத்தார்.

இந்த திறப்புவிழா நிகழ்வில் மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையின் செயலாளர் திரு.க.செல்வராசா, மூ.கூ.வை. பொருளாளர் திரு.அ. கிருஷ்ணமூர்த்தி, வைத்திய அத்தியட்சகர், வைத்திய கலாநிதி கே.சுரேந்திரகுமாரன், வைத்தியர் பி.சிறீகிருஷ்ணா, வைத்தியர் றஜனி மற்றும் வைத்திய நிபுணர் வீரசுதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த வைத்தியசாலையின் இலவச வைத்திய சேவைகளான நீரிழிவு பரிசோதனை, இரத்த பரிசோதனைகள் உள்ளிட்ட பல பரிசோதனைகள் இடம்பெறவுள்ளன.

தினமும் காலை 7 மணி தொடக்கம் காலை 10 மணிவரை மற்றும் மாலை 4 மணி தொடக்கம் 7 மணிவரை, வைத்திய நிபுணர்கள் பலர் இணைந்து இலவசமாக மருத்துவ ஆலோசனைகளை வழங்க முன்வந்துள்ளனர்.

இந்த வைத்தியசாலையின் சேவைகளில் வெளிநாடுகளில் வசிக்கும் வட்டுக்கோட்டையை சேர்ந்த உதவ முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

#SrilankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version