செய்திகள்
இரு நாட்கள் இருளில் மூழ்கவுள்ளதா இலங்கை..?
யுகதனவி மின் உற்பத்தி விவகாரம் தொடர்பில், மின்சாரசபை தொழிற்சங்க ஊழியர்கள் அதிரடி நடவடிக்கையினை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கெரவலப்பிட்டி யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தை அமெரிக்க நிறுவனமொன்றுக்கு வழங்கும் அரசின் செயற்பாட்டுக்கு எதிராக இந்நடவடிக்கையினை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படிநாடு முழுவதும் இரண்டு நாட்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்த ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்க ஊழியர்கள் இதுபற்றி நேற்று இரவு கொழும்பில் நடந்த விமல் அணி தலைமையில் நடந்த பேச்சில் இது தொடர்பாக தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க நிறுவனத்திற்கு யுகதனவி மின் உற்பத்தி நிலைய பங்குகளை வழங்கும் அரசின் செயற்பாட்டுக்கு எதிராக அரச ஆதரைவச் சேர்ந்த 11 கட்சிகள் போர்க்கொடி உயர்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பில் பிரதமர் மகிந்த ராஜபக்சவுடன் நடத்திய பேச்சு தோல்வியில் முடிந்த நிலையில் ஜனாதிபதியுடன் பேச்சு நடத்த அவர்கள் கடிதம் எழுதிய போதிலும் பிரதமர் அல்லது நிதியமைச்சருடன் இது தொடர்பில் பேச்சு நடத்துமாறு அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இரு நாட்களுக்கு தொடர் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபடபோவதாக இலங்கை மின்சார சபை ஊழியர் சங்கத்தின் இணைப்பாளர் ரஞ்சன் ஜெயலால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கெரவலப்பிட்டிய ‘யுகதனவி’ மின் உற்பத்தி நிலையம் தொடர்பில் அமெரிக்க நிறுவனத்துடன் கைச்சாத்திடப்பட்டுள்ள ஒப்பந்தத்தை இரத்து செய்யாவிடின், மேற்படி போராட்டம் இடம்பெறுவது உறுதி எனவும் அவர் அறிவித்துள்ளார்.
” அமெரிக்க நிறுவனத்துடனான ஒப்பந்தம் இரத்துசெய்யப்பட வேண்டும் என அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். இன்னும் சாதகமான பதில் கிடைக்கவில்லை. அவ்வுடன்படிக்கை கட்டாயம் இரத்தாக வேண்டும். அதற்கான எமது அழுத்தம் தொடரும்.” – என்றும் ரஞ்சன் ஜெயலால் கூறியுள்ளார்.
#SrilankaNews
You must be logged in to post a comment Login