செய்திகள்
சிமெந்துத் தட்டுப்பாட்டிற்குக் காரணம் இதுதான்!-
சிமெந்து தட்டுப்பாட்டுக்கு முக்கிய காரணம், சிமெந்தை இறக்குமதி செய்யும் பல நிறுவனங்கள் இறக்குமதியை இடைநிறுத்தியமை தான் என இலங்கையின் முன்னணி சிமெந்து நிறுவனமொன்றின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
டொலர் தட்டுப்பாடு காரணமாக வங்கிகளில் கடன்களை பெறுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால், சிமெந்து இறக்குமதியில் இருந்து நிறுவனங்கள் பின்வாங்குகின்றன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது சிமெந்து இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் மாதாந்தம் கூடுதலாக 10,000 மெற்றிக் தொன் சிமெந்தை இறக்குமதி செய்ய முடிந்தால் இந்நிலைமையைத் தவிர்க்க முடியும் எனவும் சிமெந்து நிறுவனமொன்றின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதேவேளை இலங்கையின் சிமெந்துத் தேவையில் 60 வீதம் இலங்கையில் உற்பத்தி செய்யப்படுவதாகவும் எஞ்சிய 40 வீதம் இறக்குமதி செய்யப்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
உள்ளூர் சிமெந்து உற்பத்தி மாதமொன்றுக்கு 150,000 மெற்றிக் தொன்னை தாண்டுவதாகக் கூறிய அவர், பாரிய அளவிலான கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் சிமெந்தை பதுக்குவதால் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது.
கட்டுப்பாட்டு விலையை நீக்கியதன் மூலம் 50 கிலோ எடையுள்ள சிமெந்து மூடை ஒன்றின் விலையை அரசாங்கம் அண்மையில் 93 ரூபாவினால் உயர்த்திய போதிலும், தற்போது கடுமையான சிமெந்து தட்டுப்பாடு நிலவி வருகின்றது.
#SrilankaNews
You must be logged in to post a comment Login