Connect with us

செய்திகள்

சபரிமலையில் நேரடியாக நெய் அபிசேகம் செய்வதற்கு அனுமதி

Published

on

media handler

கார்த்திகை முதல்பருவத்தில்,  சபரிமலையில் பக்தர்கள் அபிஷேக நெய் நேரடியாக கொடுக்கலாம் என்று தேவசம் போர்டு தலைவர் தெரிவித்துள்ளார்.

சபரிமலையில் வரவிருக்கும் கார்த்திகை மாத பருவத்தில், முன்னர் இருந்ததுபோன்று பக்தர்கள் நேரடியாக சன்னிதானத்தில்  அபிஷேகம் செய்வதற்கு நெய் வழங்கும் முறை மீண்டும் கொண்டுவரப்படவுள்ளதாக திருவாங்கூர் தேவசம் போர்டு தலைவர்  கூறியுள்ளார்.

சபரிமலை ஜய்யப்பன் கோவிலில் ஏற்கனவே உள்ள வசதிகள் மற்றும் இன்னும் எதிர்பார்க்கப்படும் வசதிகள் குறித்த ஆலோசனை கூட்டம் சென்னை, நுங்கம்பாக்கம் மகாலிங்கபுரம் அய்யப்பன்-குருவாயூரப்பன் கோவிலில் உள்ள சன்னிதானம் அரங்கில் நேற்று இடம்பெற்றது.

கூட்டத்தின் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருவாங்கூர் தேவசம் போர்டு  இவ்வாறு குறிப்பிட்டார்.

கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக சபரிமலையில் கடந்த 2 ஆண்டுகளாக எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் இருந்தது.

இந்த ஆண்டு நோய் தொற்று கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதால் கோவிலில் பக்தர்களுக்கு வேண்டிய அடிப்படை வசதிகள் மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது.

கடந்த மாதம் வரை 1 நாளைக்கு 25 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வந்தனர்.

கேரள மாநிலத்தில் சமீபத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பக்தர்கள் வந்து செல்வதில் சிரமம் ஏற்பட்டது.

வருகிற கார்த்திகை மாத பருவத்தில் ஒரு நாளைக்கு 50 ஆயிரம் பக்தர்கள் வந்து செல்வதற்கான கூடுதல் வசதிகளை செய்துதர திட்டமிடப்பட்டு உள்ளது.

சபரிமலைக்கு பக்தர்கள் தேங்காயில் அடைத்து கொண்டு வரும் நெய்யை அதற்கான கவுண்டரில் செலுத்திவிட்டு சிறிது நேரத்திற்கு பிறகு அபிஷேகம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வந்தது.

இந்த முறையில் சற்று மாற்றம் செய்து முன்பு இருந்தது போன்று பக்தர்கள் நேரடியாகவே சன்னிதானத்தில் அவர்கள் கொண்டு வரும் நெய்யை அபிஷேகத்துக்கு வழங்கும் முறை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

தங்குமிடம் வசதி, உணவு, போக்குவரத்தையும் மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக பம்பை ஆற்றில் குளிப்பது புனிதமாக கருதப்படுகிறது. போக்குவரத்து கடந்த 2 ஆண்டுகளாக பம்பை வரை அனுமதிக்கப்படவில்லை.

வரவிருக்கும் சீசனில் பம்பை வரை போக்குவரத்தை அனுமதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

கொரோனா காலத்தில் சபரிமலைக்கு 60 வயதுக்கு மேற்பட்டவர்களும், 10 வயதுக்கு கீழ் உள்ளவர்களும் அனுமதி மறுக்கப்பட்டு வந்தது.

அதிலும் மாற்றம் செய்யப்பட்டு 2 தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் அனைவரையும் அனுமதிப்பதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. சென்னை, மகாலிங்கபுரம் அய்யப்பன் கோவிலில் ஏற்கனவே செயல்பட்டு வந்த தகவல் மையம் மீண்டும் முறையாக செயல்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்’ என்று  குறிப்பிட்டுள்ளார்

#india

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

Advertisement

ஜோதிடம்

Rasi Palan new cmp 1 Rasi Palan new cmp 1
ஜோதிடம்6 மணத்தியாலங்கள் ago

​இன்றைய ராசி பலன் 02.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

நாளின் தொடக்கத்தில் நாம் நாளுக்குரிய ராசிபலனை அறிந்து கொண்டு அதற்கேற்றாற்போல் முன்னெச்சரிக்கை போல் சில செயல்களை திட்டமிட்டு நடந்து கொள்ள, நினைத்த செயல்கள் வெற்றி பெறும். கிரக...

Rasi Palan new cmp Rasi Palan new cmp
ஜோதிடம்1 நாள் ago

இன்றைய ராசி பலன் – 01.05.2024 : Horoscope Today labour day, 01 May

இன்றைய ராசி பலன் – 01.05.2024 : Horoscope Today labour day, 01 May குரு பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு ஒரு ஆண்டு...

Rasi Palan new cmp 17 Rasi Palan new cmp 17
ஜோதிடம்2 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் – 30.04.2024-Horoscope Today, 30 April

இன்றைய ராசி பலன் – 30.04.2024-Horoscope Today, 30 April நாளின் தொடக்கத்தில் நாம் நாளுக்குரிய ராசிபலனை அறிந்து கொண்டு அதற்கேற்றாற்போல் முன்னெச்சரிக்கை போல் சில செயல்களை...

Rasi Palan new cmp 16 Rasi Palan new cmp 16
ஜோதிடம்3 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் 29.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசி பலன் 29.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் ஏப்ரல் 29, 2024, குரோதி வருடம் சித்திரை...

Rasi Palan new cmp 15 Rasi Palan new cmp 15
ஜோதிடம்4 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 28.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 28.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் ஏப்ரல் 28, 2024, குரோதி வருடம் 15,...

tamilnaadi 5 tamilnaadi 5
ஜோதிடம்5 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 27.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 27.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் ஏப்ரல் 27, 2024, குரோதி வருடம் சித்திரை...

Rasi Palan new cmp 14 Rasi Palan new cmp 14
ஜோதிடம்6 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 26.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 26.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் ஏப்ரல் 26, 2024, குரோதி வருடம் சித்திரை...