செய்திகள்
கூட்டமைப்பின் கோட்டைகளை கைப்பற்ற பஸில் வியூகம்!
கூட்டமைப்பின் கோட்டைகளை கைப்பற்ற பஸில் ராஜபக்ச வியூகம் வகுத்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சிவநேசன்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுவார் என தகவல் வெளியாகியிருந்த நிலையில், அது தற்போது உறுதியாகியுள்ளது.
மொட்டு கூட்டணியின் சார்பில் முதல்வர் வேட்பாளராகவே அவர் களமிறக்கப்படலாம் எனவும், பட்ஜட் கூட்டத்தொடரின் பின்னர் பதவி விலகுவார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கிழக்கு மாகாண அரசியல் பிரமுகர்களான அதாவுல்லா, கருணா, ஹிஸ்புல்லா உட்பட பல தரப்புகளின் ஆதரவுடன் பிள்ளையான் களமிறங்கலாம் எனவும், இதனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸ் ஆகியவற்றுக்கு கிழக்கு தேர்தல் களம் சவால்மிக்கதாக காணப்படும் என ஊகம் வெளியிடப்பட்டுள்ளது. கூட்டமைப்புக்கான வாக்கு வங்கியை உடைப்பதற்காக உதிரிகளும் களமிறக்கப்படவுள்ளன.
பிள்ளையானை வைத்து பஸிலே தற்போது வியூகம் வகுத்துவருகின்றார். அதேவேளை, வடக்கு மாகாணத்திலும் முக்கிய புள்ளியொருவரை களமிறக்குவதற்கான பேச்சுகள் இடம்பெற்று வருகின்றன.
You must be logged in to post a comment Login