செய்திகள்
ஈரானில், வெளிநாடுகளுக்குத் தகவல் அனுப்பிய உளவாளிகள் கைது
ஈரானில், வெளிநாடுகளுக்குத் தகவல் அனுப்பிய உளவாளிகள் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
2019-ம் ஆண்டில் ஈரானின் அணு மற்றும் இராணுவத் தளங்களை உளவு பார்த்ததாக எழுந்த குற்றச்சாட்டில் 17 ஈரானியர்கள் கைது செய்யப்பட்டனர்.
இவர்களில் ஈரானின் புஷெர் மாகாணத்தில் மட்டும் அந்நாட்டு உளவுத்துறையினர் 10 பேரை கைது செய்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்கள் வெளிநாடுகளுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இவர்கள் எந்தெந்த நாடுகளுக்குத் தகவல்களை அனுப்பினார்கள் என்ற விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.
கைதான 10 பேரும் ஈரானின் விரோத நாடுகளின் உளவு அமைப்புகளுடன் கூட்டாளிகளாகவும், பினாமிகளாகவும் செயல்பட்டு வந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2019ஆம் ஆண்டில் இவ்வாறு கைதுசெய்யப்பட்ட சிலருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
You must be logged in to post a comment Login