செய்திகள்
தொற்றிலிருந்து மீள தசாப்தங்கள் எடுக்கும்!
நாட்டு மக்கள் கொவிட் தொற்றிலிருந்து மீண்டு வர பல தசாப்த காலங்கள் செல்லலாம்.
நாடு வழமைக்கு திரும்பி வந்தாலும், கொவிட் அவதான நிலைமையிலிருந்து மக்கள் இன்னமும் மீளவில்லை.
இவ்வாறு பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கொவிட் பரவலைத் தடுப்பதற்கு பிறப்பிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை நீக்குவதன் மூலம், வைரஸ் பரவல் வேகமாக அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
மக்கள் சாதாரண நிலைமைக்கு மீண்டும் திரும்ப முடியும் என்பதை, என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.
நாடு கொவிட் தொற்றுப் பரவலுக்கு முன்னால் இருந்த பழைய நிலைமைக்குச் செல்வதற்கான வாய்ப்பு தற்போது எந்த விதத்திலும் இல்லை. மக்கள் தற்போது காணப்படும் புதிய சாதாரண முறையை நோக்கி பயணிக்க தம்மை பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும். – என்றார்.
You must be logged in to post a comment Login