செய்திகள்
இறுக்கத்தை தளர்க்கும் அமெரிக்கா -வெள்ளை மாளிகையிலிருந்து வெளிவந்த செய்தி!
அமெரிக்காவுக்கு பிற நாட்டவர் வர அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
வரும் கார்த்திகை மாதம் முதல் அமெரிக்காவுக்கு பிற நாட்டவர் வருவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ளது.
கொரோனா தொற்றுக் காரணமாக பிரிட்டன், ஐரோப்பிய யூனியன் மற்றும் பிற நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு நுழைய விதிக்கப்பட்டிருந்த நிலையில் இவ்வறிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் அமெரிக்காக்குள் வருவோர் தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழை தம்வசம் வைத்திருக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, பயணத்திற்கு 3 நாட்கள் முன்பாக கொரோனா பரிசோதனைஎடுக்க வேண்டுமெனவும் அதில் கொரோனா இல்லை என்பதை உறுதிப்படுத்தும் சான்றிதழை வைத்திருப்பது அவசியம் என அவ் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் அவர்களோடு தற்போது தொடர்பில் இருப்பவர்கள் குறித்த விவரங்களைத் தர வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் இத்தகைய கட்டுப்பாடுகள் குழந்தைகளுக்கு பொருந்தாது என அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
You must be logged in to post a comment Login