செய்திகள்
இலங்கையில் முதன்முறையாக அபூர்வ அறுவை சிகிச்சை!
இலங்கையில் முதன்முறையாக அபூர்வமான அறுவை சிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
களுத்துறை மாவட்ட மருத்துவமனையில் வெற்றிகரமான வித்தியாசமான முறையில் இந்த சிறுநீரக அறுவை சிகிச்சை இடம்பெற்றுள்ளது.
இந்த அறுவை சிகிச்சையில் நோயாளியை மயக்கமாக்காது சிறுநீரகத்தில் உள்ள கல்லை வெற்றிகரமாக அகற்றப்பட்டுள்ளது எனவும் இதுவே இலங்கையில் இவ்வாறு மேற்கொள்ளப்படும் முதல் சத்திர சிகிச்சை எனவும் மருத்துவர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் புதிய தொழில்நுட்ப இயந்திரத்தின் உதவியுடன் இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நோயாளியின் சிறுநீரகம் முழுவதும் பரவியுள்ள 5 சென்ரிமீற்றர் அளவிலான கல் மற்றும் வேறு சிறிய சிறிய கற்கள் என்பவை இதன் மூலம் அகற்றப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நோயாளியை மயக்கமடையச் செய்யாது முதன்முறையாக வெற்றிகரமாக இடம்பெற்ற அறுவை சிகிச்சை இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
You must be logged in to post a comment Login