செய்திகள்
நாடு முழுவதும் அதிவேக இன்டர்நெற்
நாடு முழுவதும் அதிவேக இணையவசதியை வழங்கும் ஜனாதிபதியின் ‘கிராமத்துக்கு தொடர்பாடல்’ எனும் கருத்திட்டம் தொடர்பில் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு 2019 ஆம் ஆண்டு அமுல்படுத்திய இந்தத் திட்டத்தின் மூலம் அதிகவேக இணைய வலையமைப்புகளின் குறைபாடுகள் தொடர்பில் ஆய்வொன்று 25 மாவட்டங்களில் 14 ஆயிரம் கிராம அலுவலர் பிரிவுகளை உள்ளடக்கி நடத்தப்பட்டிருந்தது.
இதன்படி தற்போது நாடளாவிய ரீதியில் குறித் கருத்திட்டத்தை தேசிய கருத்திட்டமாக விரிவாக்கம் செய்ய அரசு திட்டமிட்டுள்ளது.
அதற்கு தேவையான நிதியை தொலைத் தொடர்புகள் அபிவிருத்தி நிதியிலிருந்து பெற்றுக் கொடுக்கவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த நிலையில் இந்தத் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்த சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
You must be logged in to post a comment Login