செய்திகள்
திருமண நிகழ்வுகளுக்கு புதிய கட்டுப்பாடுகளுடன் அனுமதி!
இலங்கையில் திருமண நிகழ்வுகளை நடாத்த புதிய கட்டுப்பாடுகளுடன் சுகாதார பிரிவினரினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 16ஆம் திகதி முதல் 50 விருந்தினர்களுடன் திருமண நிகழ்வுகளை நடத்துவதற்கு சுகாதார பிரிவு அனுமதி வழங்கியுள்ளது.
இதற்கமைய,திருமண நிகழ்வு மண்டபங்களுக்குள் நுழைய, இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றவர்களுக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்படவுள்ளதுடன்,தடுப்பூசி பெறாத நபர்களுக்கு அனுமதி மறுக்கப்படலாமெனவும் தெரிவிக்கப்படுகின்றது.
சுகாதார அமைச்சின் அனுமதிக்கு அடைய சுகாதார வழிகாட்டல்களுடன் நிகழ்வுகளுக்கான நடவடிக்கை எடுக்குமாறு சங்கத்தின் அதிகாரிகள் ஹோட்டல் உட்பட அனைத்து தரப்பினரிமும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
You must be logged in to post a comment Login