LOADING...

ஐப்பசி 2, 2021

பிரித்தானியாவிலிருந்து வரும் பயணிகளுக்கு கட்டுப்பாடு! – இந்தியா நடவடிக்கை

பிரித்தானியாவில் இருந்து வரும் பயணிகளுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க இந்தியா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவிலிருந்து வருபவர்களுக்கு பிரித்தானியா விதித்துள்ள அதே கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு இந்தியா முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த புதிய கட்டுப்பாடுகள் எதிர்வரும் 4ம் திகதி முதல் அமுலுக்கு வரும் எனவும், பிரித்தானியாவிலிருந்து வரும் அனைவருக்கும் இது பொருந்தும் என தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, பிரித்தானியாவிலிருந்து இந்தியா வரும் அனைவரும், தடுப்பூசி போட்டிருந்தாலும் போடவில்லை என்றாலும் பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  • பயணத்திற்கு முன் 72 மணி நேரத்திற்குள் கொரோனா ஆர்டி-பிசிஆர் சோதனை மேற்கொள்ள வேண்டும்.
  • இந்தியா வந்தவுடன் விமான நிலையத்தில் ஆர்டி-பிசிஆர் சோதனை மேற்கொள்ள வேண்டும்.
  • இந்தியாவுக்கு வந்த பிறகு 8வது நாளில் ஆர்டி-பிசிஆர் சோதனை மேற்கொள்ள வேண்டும்.
  • இந்தியாவுக்கு வந்த பிறகு வீட்டிலோ அல்லது செல்லும் இடத்திலோ 10 நாட்களுக்கு கட்டாயமாக தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும்.
Prev Post

வாகனங்களை கொள்வனவு செய்யவுள்ளோருக்கு ஓர் மகிழ்ச்சி தகவல்?

Next Post

2022 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

post-bars

Leave a Comment