செய்திகள்
இரணைமடுக் குளத்தின் கீழ் சேதனப்பசளையில் பயிர்ச்செய்கை
கிளிநொச்சி இரணைமடுக் குளத்தின் கீழ் 2021 ஆம் ஆண்டுக்கான காலபோக செய்கை சேதனப் பசளையை மாத்திரம் பயன்படுத்தி 20 ஆயிரத்து 882 ஏக்கர் பரப்பரளவில் மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதனை கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் திருமதி றூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இரணைமடுக் குளத்தின் கீழான பயிர்ச்செய்கைக் கூட்டத்தின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இம்முறை புதிதாக 500 ஏக்கர் பரப்பளவு நெற்பயிர்ச் செய்கைக்கு உள்வாங்கப்பட்டுள்ளது. அத்தோடு அரசின் கொள்கைக்கு அமைவாக சேதனப்பசளையை மாத்திரம் பயன்படுத்தி மேற்கொள்ளப்படவுள்ளது.
காலபோக பயிர்ச்செய்கை ஆரம்ப திகதியாக எதிர்வரும் 06 ஆம் திகதியாகவும் இறுதி அறுவடைத் திகதி 2022 ஆம் ஆண்டு பெப்ரவரி 28 ஆம் திகதியாகவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும் சேதனப்பசளை உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் அரசால் மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர் திணைக்களத்துக்கு 90.2 மில்லியன் பெறுமதியான உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன எனவும் அவர் தெரிவித்தார்.
You must be logged in to post a comment Login