13,000 தாண்டியது கொவிட் சாவு!
இலங்கையில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி நேற்றைய தினம் மேலும் 55 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி நாட்டில் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 19 ஆக அதிகரித்துள்ளது.
நேற்றைய தினம் உயிரிழந்தவர்களின் 30 வயதுக்கு கீழ் 2 பெண்களும் 30–59 வயதுக்கு இடைப்பட்ட 11 ஆண்களும் 04 பெண்களும் 60 வயதுக்கு மேற்பட்ட 27 ஆண்களும் 11 பெண்களும் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.