செய்திகள்
சீனப் பசளையில் பக்ரீறியா! – இறக்குமதிக்கு தடை
சீனாவிலிருந்து இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டிருந்த பசளையில் காலநிலைக்கு பொருத்தமற்ற பக்ரீறியாக்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் சீனாவிலிருந்து சேதனப் பசளையை இறக்குமதி செய்யப் போவதில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
பெரும்போக நெல் உற்பத்திக்காக சீனாவிலிருந்து சேதனப் பசளை இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்ட நிலையில் பசளை மாதிரிகள் பெறப்பட்டிருந்தன.
குறித்த பசளை மாதிரிகளில் விவசாயத்துறை நிபுணர்களால் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் இலங்கையின் மண்வளத்துக்கும் காலநிலைக்கும் பொருத்தமற்ற நுண்ணுயிர்கள் காணப்படுகின்றன என உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து சீனாவில் இருந்து சேதனப் பசளையை இறக்குமதி செய்வதை நிறுத்தப்பட்டால் பெரும்போக நெற் உற்பத்திக்கு பசளை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
You must be logged in to post a comment Login