செய்திகள்
நாளை சீனாவில் விமானக் கண்காட்சி ஆரம்பம்!


சீனாவின் தெற்கு நகரமான ஜீஹாயில் விமானக் கண்காட்சி நடைபெறவுள்ளது.
உள்நாட்டு விண்வெளி தொழில் நுட்பத்தை மேம்படுத்துவதற்காக நாட்டின் முயற்சிகளை எடுத்துக்காட்டும் நோக்கில் இந்த கண்காட்சி நிகழ்ச்சி நடாத்தப்படவுள்ளது.
விண்வெளியில் தன்னிறைவு நிலை மற்றும் வளர்ந்து வரும் இராணுவ வலிமை ஆகியன இக் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படவுள்ளது
விமானப் படையின் மிக முன்னேறிய போர் விமானமான J-20 சம்மந்தப்பட்ட திகைப்பூட்டும் விமான நிகழ்ச்சிகள் கண்காட்சியில் இடம்பெறவுள்ளதாக குளோபல் டைம்ஸ் பத்திரிகை அறிவித்துள்ளது.
முதல் முறையாக J-16D மின்னணு போர் விமானம்,WZ-7உயர் ட்ரோன் விமானங்கள் மற்றும் WZ-8 அதி வினைத்திறன் மிக்க விமானங்கள் உள்ளிட்ட பிற மேம்பட்ட விமானங்களும் வெளிப்புறக் கண்காட்சிக்கு வைக்கப்படவுள்ளது.