செய்திகள்
நாட்டு மக்களிடம் அரசாங்கம் முன்வைத்துள்ள கோரிக்கை!
நவம்பர் மாதத்தின் இரண்டாவது வாரத்தில் மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஆகவே சில வாரங்கள் பொறுப்புடன் நடந்துகொள்ளுமாறு நாட்டு மக்களிடம் அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
அநுராதபுரத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றியஇராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,
மொத்த மக்கள் தொகையில் 50 வீதத்திற்கும் அதிகமான மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும்போது இது ஒரு மகத்தான சாதனையாகும்.
சமுதாயத்தில் வைரஸ் பரவுவது குறைந்து வருகின்ற தற்போதைய நிலைமையை பேணுவதே நாம் இயல்பு நிலைக்கு திரும்ப உதவும் செயற்பாடாக அமையும் எனவும் அவர் தெரிவித்தார்.
அந்தவகையில் இந்த நவம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் நாடு படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பும் எனவும், வரவிருக்கும் சில வாரங்களில் பொறுப்புடன் நடந்துகொள்ளுமாறு அவர் நாட்டு மக்களை கோரியுள்ளார்.
You must be logged in to post a comment Login