செய்திகள்
கொரோனா வழக்கு! – சிறுவனுக்கு வெற்றி
கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொள்வது தொடர்பில் நெதர்லாந்தில் சிறுவனொருவன் நீதிமன்றத்தில் முன்னெடுத்த சட்டப் போராட்டத்தில் வெற்றி பெற்றுள்ளான்.
12 வயதுடைய குறித்த சிறுவன் கொரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசி பெறுவதற்காகவே வழக்கை தொடுத்திருந்தான்.
நெதர்லாந்தில் 12 தொடக்கம் 17 வயது சிறுவர்களுக்கு தடுப்பூசி போட அனுமதி அளிக்கப்பட்டபோதும் 17 வயதுக்கு குறைந்தவர்களுக்கு தடுப்பூசி பெற பெற்றோர்களின் அனுமதி தேவையாக உள்ளது.
இந்நிலையில் தடுப்பூசி பெறுவதற்கெதிராக சிறுவனின் தந்தை எதிர்ப்பை வெளிக்காட்டிய நிலையிலேயே இவ்வழக்கு முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இவ்வழக்கில் சிறுவன் தடுப்பூசி செலுத்திக்கொள்ளவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளான்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் தறுவாயில் உள்ள தனது பாட்டியை காணச் செல்வதற்காகவே தடுப்பூசி பெற அனுமதி கேட்டு குறித்த சிறுவன் வழங்குத் தொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
You must be logged in to post a comment Login