செய்திகள்
திலீபனின் நினைவேந்தலுக்கு யாழ்.நீதிமன்று தடை
தமிழின விடுதலைக்காக தன்னுயிரை தியாகம் செய்த தியாகி திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுக்கு யாழ்.நீதிவான் நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.
நேற்று பிற்பகல் இந்தத் தடை உத்தரவு பொலிஸாரால் பெறப்பட்டுள்ளது.
நல்லூரில் உள்ள தியாகதீபம் திலீபலின் நினைவிடத்தில் 34வது ஆண்டு நினைவேந்தல் எதிர்வரும் 26ம் திகதிவரை நடத்த ஏற்படாசெய்யப்பட்டது.
இந்நிலையில் நிகழ்வுக்கு தடை விதித்து உத்தரவிடுமாறு யாழ்.தலைமையகப் பொலிஸாரால் நீதிமன்றில் விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது.
தடைசெய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர் என்ற வகையில் திலீபனை நினைவுகூர மற்றும் நிகழ்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
நாட்டில் நிலவும் கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக நடைமுறையில் உள்ள தனிமைப்படுத்தல் சட்டத்துக்கு அமைய நிகழ்வுகளை நடத்த முடியாது எனவும் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு தடை விதிக்க வேண்டும் எனவும் மன்றில் விண்ணப்பம் செய்யப்பட்டது.
இந்த நிலையில் பொலிஸாரின் விண்ணப்பத்தை ஏற்ற யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.
You must be logged in to post a comment Login