செய்திகள்
கிளிநொச்சியில் 14 வயது சிறுவன் மீது தாக்குதல்!
கிளிநொச்சி – பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முல்லையடி பகுதியில் 14 வயது சிறுவன் ஒருவன் கடுமையான தாக்குதலுக்கு உட்பட்டுள்ளார் .
அந்தப் பகுதியில் தொடர்ச்சியாக அனைவருடனும் முரண்பட்டு வரும் நபரொருவர் நேற்றையதினம் சிறுவனை தாக்கியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது ,
அண்மைக்காலமாக பளையில் வசித்துவரும் நபரொருவர் அதிகமானவர்களுடன் வீண் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். பளை பொலிஸ் நிலையத்தில் அவர் மீது அதிகமான வழக்குகளும் பதிவாகியுள்ளன.
இந்நிலையில் நேற்றைய தினம் (22) குறித்த நபர் சிறுவனின் தாயாரை தகாத வார்த்தைகளால் பேசியுள்ள நிலையில் குறித்த சிறுவன் ஆத்திரத்தில் நியாயம் கேட்க சென்றுள்ளான். இதன்போதே குறித்த சிறுவன் கடுமையாக தாக்கப்பட்டுள்ளான் என தெரிவிக்கப்படுகிறது .
இத் தாக்குதலில் சிறுவனின் கழுத்தில் கடுமையான காயம் ஏற்பட்டுள்ள நிலையில் நோயாளர் காவு வண்டியினூடாக கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளான்.
இது தொடர்பில் சிறுவர் பாதுகாப்பு பிரிவினரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதோடு, பளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
You must be logged in to post a comment Login