செய்திகள்
புதிய கல்விக் கொள்கை! – கல்வி அமைச்சர் தெரிவிப்பு
புதிய கல்விக் கொள்கை! – கல்வி அமைச்சர் தெரிவிப்பு
நாட்டுக்கு அவசியமான புதிய தேசிய கல்விக் கொள்கை தயாரிக்கப்பட்டு உள்ளது என கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.
நாடாளுமன்ற நடைபெற்ற கல்வி அமைச்சுசார் ஆலோசனைக் குழுவிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பாடசாலைகளில் நிலவும் அதிபர் பற்றாக்குறைக்கு உரிய நடைமுறையொன்று விரைவில் தயாரிக்கப்பட வேண்டியதன் அவசியம் பற்றியும் இக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.
தற்பொழுது ஏற்பட்டுள்ள ஆசிரியர் சம்பளப் பிரச்சினையைத் தீர்ப்பது மிகப்பெரிய சிக்கலாக மாறியுள்ளது எனக் குறிப்பிட்ட இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, ஆசிரியர்களின் பணியிடத் தெரிவு தொடர்பான வேலைத்திட்டம் ஒழுங்குபடுத்தப்பட வேண்டும்.
கல்வியியல் கல்லூரிகளை பல்கலைக்கழகமாக மாற்றும் திட்டம் நடந்து வருகிறது – என்றார்.
You must be logged in to post a comment Login