செய்திகள்
ஊரடங்கு விதிமுறை மீறல் – இலங்கையே முதலிடம்!!
கொவிட் தொற்றுப் பரவலின் போது அதிக எண்ணிக்கையிலான முடக்கத்தை விதித்த நாடாகவும், முடக்க விதிமுறை மீறிய அதிக எண்ணிக்கையிலான மக்களைக் கொண்ட நாடாகவும் இலங்கை மாறியுள்ளது என உலக சுகாதார அமைப்பின் அறிக்கைகள் கூறுகின்றன.
இவ் விடயம் தொடர்பில், சுகாதார தொழில் வல்லுநர்கள் அமைப்பின் தலைவர் ரவி குமுதேஷ் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
முடக்கம் ஒழுங்கான முறையில் இல்லாமல் நீண்ட காலத்துக்கு அமுல்படுத்தப்பட்டதால், ஊரடங்கு பற்றிய கருத்து பலவீனப்படுத்தப்பட்டுள்ளது.
முடக்க காலத்தில் பி.சி.ஆர். மற்றும் பிற சோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனினும், சுகாதார அமைச்சும், அதிகாரிகளும் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.
முடக்கம் சரியாக அமுல்படுத்தப்படாததால் நாட்டை மீண்டும் திறக்கும்படி கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்துவார்கள்.
ஒரு அறிவியல் ரீதியான முடக்கத்தை அமுல்படுத்தினால் மட்டுமே கொரோனாத் தொற்றைக் குறைக்க முடியும் – என்றுள்ளார்.
You must be logged in to post a comment Login