செய்திகள்
வெளிநாட்டில் இருப்பவர்களால் நீதித்துறை பாதிப்படைகிறது!!- நீதி அமைச்சர் காட்டம்
வெளிநாட்டில் இருப்பவர்களால் நீதித்துறை பாதிப்படைகிறது!!- நீதி அமைச்சர் காட்டம்
இலங்கையின் நீதிமன்ற சுயாதீன செயற்பாடுகளை மழுங்கடிக்கும் வகையில் வெளிநாட்டில் இருந்து பலர் மறைமுகமாக செயற்படுகிறார்கள் என நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் நீதிமன்றம் மற்றும் நீதிபதிகள் சிறப்பாக செயற்படுகின்றனர்..ஆனால் வெளிநாட்டில் இருந்து பல நபர்கள் தமக்கு சாதகமான தீர்ப்புகள் கிடைக்க வேண்டும் என்று சமூக ஊடகங்கள் வாயிலாக நீதிமன்றங்களின் சுயாதீனதன்மைக்கு பங்கம் விளைவிக்கின்றனர்.
சமூக ஊடகங்களில் வெளியாகும் தகவல்களை மக்கள் நம்புகின்றனர். இதனால் நீதிபதிகளும் அவர்களின் குடும்பத்தினரும் அழுத்தங்களுக்கு உள்ளாகின்றனர்.
இவ்வாறு நீதிமன்றத்தின் சுயாதீனதன்மை தொடர்பில் வதந்திகளை பரப்புவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
உள் நாட்டிலும் இவ்வாறு பொய் பிரச்சாரம் செய்யும் ஊடகங்கள் உள்ளன. ஆனாலும் பெருபாலான நபர்கள் வெளிநாட்டில் மறைந்து இருந்து செயற்படுகின்ற காரணத்தால் அவர்களை சட்டத்தின் முன் நிறுத்த முடியவில்லை.
இவ்வாறான சிலரின் பொய்யான பிரச்சாரங்களால் அனைவருக்கும் அழுத்தம் பிரயோகிக்கப்படுகிறது எனத் தெரிவித்துள்ளார்.
You must be logged in to post a comment Login