செய்திகள்
கொவிட் தகனம் – செலவைப் பொறுப்பேற்ற இளைஞர்கள்!!
கொவிட் தகனம் – செலவைப் பொறுப்பேற்ற இளைஞர்கள்!!
வவுனியாவில் கொவிட் தொற்று காரணமாக உயிரிழப்பவர்களின் சடலங்களை தகனம் செய்வதற்கான செலவை பொறுப்பேற்பதாக இளைஞர்கள் இருவர் தெரிவித்துள்ளனர்.
ஊடகவியலாளர் ப.கார்த்தீபன் மற்றும் சேப்ரி கண் நிறுவன உரிமையாளர் ம.மயூரன் ஆகியோரே இந்த செலவை வழங்குகிறோம் எனத் தெரிவித்துள்ளனர்.
கொவிட் தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்கள் வவுனியா நகரசபைக்கு சொந்தமான பூந்தோட்டத்தில் அமைந்துள்ள இலத்திரனியல் மயானத்தில் தகனம் செய்யப்பட்டு வருகின்றன.
இதன்போது சடலம் ஒன்றுக்கு 7 ஆயிரம் ரூபா நகரசபையால் கட்டணமாக அறவிடப்படுகின்றது. இந்த கட்டணத்தை தாம் வழங்குகிறோம் என தெரிவித்துள்ளனர்.
சடலங்களை தகனம் செய்வதற்கு கட்டணம் செலுத்த முடியாதவர்கள் தொடர்புகொள்ளும் பட்சத்தில் நகரசபைக்கு தம்மால் முழுபணத்தையும் செலுத்தி தகனம் செய்வதற்கான நடவடிக்கையை முன்னெடுக்க உதவுகிறோம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
0778500294 அல்லது 0773525375 ஆகிய தொலைபேசி இலங்கங்களுக்கு தொடர்புகொள்வதன் மூலம் குறித்த உதவியைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
You must be logged in to post a comment Login