செய்திகள்
ஒக்டோபருக்குள் நாட்டில் பஞ்சம்! – எச்சரிக்கிறார் சம்பிக்க
அரசாங்கத்தின் திட்டமிடப்படாத நிதி மற்றும் பொருளாதார திட்டங்களால் எதிர்வரும் ஒக்டோபர் மாதத்துக்குள் நாட்டில் கடுமையான பஞ்சம் ஏற்படும் அபாயம் உள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, உலக சந்தை விலைப்படி ஒரு கிலோ சீனியை 92 ரூபாவுக்கு வாங்கி 98 ரூபாவுக்கு மக்களுக்கு கொடுக்கலாம்.92 ரூபாவுக்கு விற்பனை செய்யக்கூடிய சீனியை 220 ரூபாவுக்கு விற்க வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன அனுமதித்துள்ளார்.
உண்மையில் இந்த சந்தர்ப்பத்தில் அவர் இராஜினாமா செய்யவேண்டும். அவ்வாறு இராஜினாமா செய்யாது விலை ஏற்றத்துக்கு ஏற்றவாறு அறிக்கைகள் வழங்கியவாறு உள்ளார். இந்நிலை தொடருமாக இருந்தால், வர்த்தக அமைச்சர் சீனி மோசடியாளர்களிடமிருந்து தரகுப்பணத்தைப் பெறுகிறார் என்றே கருதமுடியும்.
தற்போது ஒரு கிலோ சீனிக்கு 100 ரூபாவுக்கு மேல் வர்த்தகர்கள் இலாபம் சம்பாதிக்கின்றனர். இந்த நிலை தொடர்ந்தால் வருடத்துக்கு சுமார் 70 பில்லியன் ரூபா வரை அவர்களால் சம்பாதிக்க முடியும் – என்று சம்பிக்க ரணவக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
You must be logged in to post a comment Login