செய்திகள்
பயண கட்டுப்பாட்டை தளர்த்தியது இங்கிலாந்து
உலக நாடுகளிடையே கொரோனாத் தொற்று பரவல் இன்று வரை பல திரிபுகளை ஏற்படுத்திய வண்ணம் பரவலடைந்து செல்கிறது.கொரோனாத் தொற்றால் மிகப்பெரும் பாதிப்பை எதிர்கொண்ட நாடுகளில் இங்கிலாந்தும் ஒன்று.
இந்த நிலையில் தற்போது இங்கிலாந்து தனது பயண சிவப்பு நிற பட்டியலில் மாண்டினீக்ரோ மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளை இணைத்துள்ளது.
அதேவேளை, கனடா, டென்மார்க், பின்லாந்து, லிச்சென்ஸ்டீன், லிதுவேனியா, சுவிட்சர்லாந்து மற்றும் அசோர்ஸ் ஆகிய நாடுகள் இங்கிலாந்தின் பச்சை நிற பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளன.
பச்சை நிற பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள நாடுகளில் இருந்து வருகை தருபவர்கள், அவர்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்களை 10 நாள்களுக்கு தம்மை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடைமுறையானது எதிர்வரும் 30 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
You must be logged in to post a comment Login