செய்திகள்
பயணக்கட்டுப்பாடு சுற்றுலாப் பயணிகளுக்கல்ல!! – அமைச்சர் பிரசன்ன!!
இலங்கையில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடு வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு பொருந்தாது என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
சுகாதார அமைச்சின் வழிகாட்டல்களுக்கு அமைய, சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வருகை தர முடியும் என அவர் கூறினார்.
Bio-bubble திட்டத்தினூடாக தெரிவு செய்யப்பட்டுள்ள பகுதிகளுக்கு மாத்திரமே சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவர் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டார்.
சுற்றுலாப் பயணிகள் தங்களுக்கான ஹொட்டல்களுக்கு அறிவித்து, தாம் தங்குவதற்கான வசதிகளையும் ஏற்படுத்திக்கொள்ள முடியும்.
அதற்கமைய, வௌிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தர எவ்வித தடையும் விதிக்கப்படவில்லை என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
You must be logged in to post a comment Login