செய்திகள்
கொவிட் தொற்று புகைப்பிடிப்பவர்களை 14 மடங்கு அதிகம் தாக்கும்!!
கொவிட் தொற்று புகைப்பிடிப்பவர்களை 14 மடங்கு அதிகம் தாக்கும்!!
புகைப்பிடிப்பவர்களுக்கு கொவிட் தொற்றின் தாக்கம் புகைப்பிடிக்காதவர்களிலும் 14 மடங்கு அதிகம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
செய்தியாளர் சந்திப்பில் புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகாரசபையின் தலைவர் சமாதி ராஜபக்ச இதனைத் தெரிவித்துள்ளார்.
வீட்டிலோ அல்லது வெளியிடம் ஒன்றிலோ புகைப்பிடிப்பவர்களுடன் இருப்பவர்களுக்கு கொவிட் தொற்று தாக்கும் சாத்தியம் அதிகமாகும்.
கொவிட் தொற்று ஏற்படக்கூடிய சாத்தியம் அதிகம் என்பது போன்றே அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களால் மரணம் நேரக்கூடிய சாத்தியமும் அதிகமாகும்.
தடுப்பூசி ஏற்றிக்கொண்டாலும் புகைப்பிடித்தல் மற்றும் மதுபானம் அருந்துதல் பழக்கமுடையவர் என்றால் தடுப்பூசி மூலம் உருவான நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடையும் என சமாதி ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.
You must be logged in to post a comment Login