செய்திகள்
பொருள்களை அதிகவிலைக்கு விற்றால் ‘1977’க்கு அழையுங்கள்!!
பொருள்களை அதிகவிலைக்கு விற்றால் ‘1977’க்கு அழையுங்கள்!!
ஊரடங்கு காலத்தில் மக்களுக்கான அத்தியாவசிய பொருள்கள், நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு விற்கப்பட்டால் 1970 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு அழைத்து முறையிடலாம் என்று நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.
அதிக விலைக்கு விற்கும் தனி வியாபாரிகள் மற்றும் நிறுவனங்களுக்கான தண்டப்பணம் ரூபா ஒரு லட்சம் முதல் லட்சம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு உடன் அமுலுக்கு வரும்வகையில் நேற்று வெயிடப்பட்டுள்ளது என்று நுகரவோர் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.
புதிய தண்டப்பண திருத்தத்தின் படி தனி வியாபாரி என்றால் ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை அதிகரிக்கப்பட்டிருக்கின்றது. நிறுவனமாக இருந்தால் 10 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை அதிகரிக்கப்பட்டிருக்கின்றது.
புதிய வர்த்தமானி அறிவிப்பின் பிரகாரம் அது ஆகக் குறைந்த தண்டப்பணம் ஒரு லட்சம் ரூபாவாகவும் ஆக்கூடியது 5 லட்சம் ரூபா எனவும் அதிகரிக்கப்பட்டிருகின்றது.
அதே நபர் இரண்டாவது தடவையாகவும் அந்த குற்றத்தை செய்தால் தற்போது இருக்கும் 2 ஆயிரம் முதல் 20 ஆயிரம் ரூபா தண்டப்பணம் இரண்டு லட்சம் முதல் 10 லட்சம் வரை அதிகரிக்கப்பட்டிருக்கின்றது.
அதேபோன்று ஒரு நிறுவனம் இந்த குற்றத்துக்கு ஆளானால் தற்போது இருக்கும் 10 ஆயிரம் ரூபா முதல் ஒரு லட்சம் ரூபா வரையான தண்டப்பணம் 5 லட்சம் முதல் 50 லட்சம் வரை அதிகரிக்கப்பட்டிருக்கின்றது.
அதே நிறுவனம் இரண்டாவது தடவையாகவும் குறித்த குற்றத்துக்கு ஆளானால் தற்போது இருக்கும் ரூபா 20 ஆயிரம் முதல் 2 லட்சம் வரையான தண்டப்பணம் 10 லட்சம் முதல் 100 லட்சம் வரை அதிகரிக்கப்பட்டிருக்கின்றது.
You must be logged in to post a comment Login