செய்திகள்
5000 தொற்றாளர்கள் வீடுகளில்!!!!!
5000 தொற்றாளர்கள் வீடுகளில்!!!!!
இலங்கையில் 5 ஆயிரத்துக்கும் அதிகமான கொரோனா நோயாளர்கள் வீடுகளிலேயே சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
மேல் மாகாணத்திலும் இரத்தினபுரி, காலி மாவட்டங்களிலும் வீடுகளில் சிகிச்சை வழங்கும் நடைமுறை அமுல்படுத்தப்பட்டுள்ளது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை 16 ஆயிரம் கொரோனா நோயாளர்கள் குணமடைந்துள்ளனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுக்கான ஏதேனும் அறிகுறிகள் அல்லது உடல் பலவீனமடைந்தால் உடனடியாக கொரோனாப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும்.
1999 என்ற துரித தொலைபேசி இலக்கத்தினூடாகவும் 011 7 966 366 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாகவும் மருத்துவ ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
You must be logged in to post a comment Login