செய்திகள்
சுய பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்க! – பேராசிரியர் திஸ்ஸ விதாரன அறிவிப்பு!
சுய பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்க! – பேராசிரியர் திஸ்ஸ விதாரன அறிவிப்பு!
கொவிட் -19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தும் தீர்மானங்கள் உரிய நேரத்தில் முன்னெடுக்கப்படுகின்றனவா என்பது தொடர்பில் சந்தேகம் நிலவுகிறது. நாட்டு மக்கள் தங்களின் சுய பாதுகாப்பை இயலுமான அளவுக்கு உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரன தெரிவித்தார்.
கொவிட்-19 வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கையும், பதிவாகும் மரணங்களின் எண்ணிக்கையும் நாளாந்தம் அதிகரித்துள்ளதே தவிர குறைவடையவில்லை.
மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடை தற்போது மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவித்த அவர் கடந்த காலங்களிலும் மாகாணங்களுக்கிடையில் பயணத்தடை விதிக்கப்பட்டது. இருப்பினும் அது முழுமையாக சாத்தியப்படவில்லை – என்றார்.
மாகாணங்களுக்கிடையில் பயணத்தடை விதிக்கப்பட்டிருந்த காலத்தில் கொவிட் -19 வைரஸ் தொற்று கட்டுப்படுத்தப்படவில்லை.
நாட்டு மக்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டார்கள். ஏப்ரல் மாதம் சுகாதார பாதுகாப்பு கட்டுப்பாடுகளை தளர்த்தாமலிருந்திருந்தால் தற்போதைய நெருக்கடியான நிலை ஏற்பட்டிருக்காது.
நாட்டை முழுமையாக முடக்கினால் பொருளாதார ரீதியில் பாதிப்பு ஏற்படும் என கருதப்படுகிறது. நாட்டு மக்கள் உயிருடன் இருந்தால் தான் பொருளாதாரத்தை முன்னெடுத்து செல்ல முடியும் என்பதை பலமுறை எடுத்துரைத்துள்ளோம். இருப்பினும் எமது கருத்துக்களுக்கு முன்னுரிமை வழங்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
You must be logged in to post a comment Login