செய்திகள்

அபாயத்தை உணராது பொதுமக்கள் செயற்படுகின்றனர்! – மருத்துவர் நிமால் அருமைநாதன் எச்சரிக்கை!!

Published

on

அபாயத்தை உணராது பொதுமக்கள் செயற்படுகின்றனர்! – மருத்துவர் நிமால் அருமைநாதன் எச்சரிக்கை!!

நாளுக்கு நாள் மாவட்டத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் இந்த நெருக்கடியை உணர்ந்துகொண்டு செயற்பட தவறின் பேரிழப்புக்களை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று கிளிநொச்சி பிராந்திய தொற்று நோயியலாளர் மருத்துவர் நிமால் அருமைநாதன் எச்சரித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் முதலாவது நோயாளி கடந்த ஆண்டு ஜூலை மாதம் அடையாளம் காணப்பட்டார். முதல் இந்த ஆண்டு ஜூலை மாதம்வரை ஆயிரத்து 400 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்களில் 14 கர்ப்பிணித் தாய்மார்கள், 10 வயதுக்குட்பட்ட 52 சிறுவர்கள் அடங்குகின்றனர். மூன்று மரணங்கள் ஏற்பட்டுள்ளன. மாவட்டத்தில் நாளுக்கு நாள் தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

ஆனால் பெரும்பாலான பொதுமக்கள் எவ்வித சமூகப் பொறுப்பும் இன்றி சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்காது நடமாடித் திரிவதனை அவதானிக்க முடிகிறது. பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்காதுவிடின் தொற்று பரவும் வேகம் மிகவும் அதிகரிக்கும்.

தடுப்பூசி செலுத்திக்கொண்டாலும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவது கட்டாயமாகும். இதனை அனைத்து மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். முக்கியமாக கொவிட் தொற்றாளர்கள் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது.

மட்டுப்படுத்தப்பட்ட சுகாதார வளங்களைக் கொண்டுள்ள கிளிநொச்சி போன்ற மாவட்டங்களில் கொவிட் தொற்றாளர்கள் அதிகரித்த மருத்துவ வளங்கள் அனைத்தும் அங்கு திசை திருப்பபடுகின்றபோது ஏனைய நோய்கள், சிகிச்சைகளை கவனிக்க முடியாது போய்விடும். இதனால் அதிகளவு பாதிப்புக்கள் மற்றும் பேரிழப்புக்கள் ஏற்படும்.

பொதுமக்கள் இந்த நெருக்கடிகளை புரிந்துகொண்டு சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்று மருத்துவர் நிமால் அருமைநாதன் வலியுறுத்தியுள்ளார்.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version