ஹாலிவுட்டில் சோகம்: எம்மி விருது வென்ற மூத்த நடிகை கேத்தரின் ஓ’ஹாரா காலமானார்!

4952471 3 org Catherine O 27Hara at the 2024 Toronto International Film Festival 1

Catherine O'Hara. File Picture: Wikimedia Commons

உலகப்புகழ் பெற்ற ஹாலிவுட் நடிகையும், எம்மி (Emmy) விருது வெற்றியாளருமான கேத்தரின் ஓ’ஹாரா (Catherine O’Hara) தனது 71 ஆவது வயதில் நேற்று (30) லொஸ் ஏஞ்சல்ஸில் காலமானார்.

அவரது மறைவுச் செய்தி வெளியானதைத் தொடர்ந்து, ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். அதேவேளை, அவரது மரணத்திற்கான காரணம் குறித்து சமூக வலைத்தளங்களில் பல்வேறு விவாதங்கள் எழுந்தன.

இது குறித்து விளக்கமளித்த அவரது ஊடகப் பிரதிநிதிகள், கேத்தரின் ஓ’ஹாரா குறுகிய கால உடல்நலக் குறைவு காரணமாகவே உயிரிழந்தார் என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

அவருக்கு என்ன விதமான நோய் பாதிப்பு இருந்தது என்பது குறித்த மேலதிக விபரங்களை வெளியிட அவரது குடும்பத்தினரோ அல்லது பிரதிநிதிகளோ முன்வரவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

‘ஹோம் அலோன்’ (Home Alone) திரைப்படத்தில் தாயாக நடித்ததன் மூலமும், ‘ஷிட்ஸ் கிரீக்’ (Schitt’s Creek) தொடரில் மோய்ரா ரோஸ் கதாபாத்திரத்தின் மூலமும் உலகெங்கிலும் உள்ள ரசிகர்களின் மனதை வென்றவர் கேத்தரின் ஓ’ஹாரா. நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிப்பில் தனக்கென ஒரு தனி முத்திரையைப் பதித்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Exit mobile version