34 8
சினிமா

தக் லைஃப் படத்தில் த்ரிஷா காதாபாத்திரம் இதுதான்.. இயக்குநர் சொன்ன ரகசியம்

Share

தென்னிந்திய சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகை த்ரிஷா. 42 வயதை எட்டிய த்ரிஷா, இன்றும் பிஸியான நடிகையாக வலம் வருகிறார்.

மேலும் அதிக சம்பளம் வாங்கும் தென்னிந்திய நடிகைகளில் இவரும் ஒருவர். அடுத்து த்ரிஷா நடிப்பில் திரைக்கு வர உள்ள திரைப்படம் ‘தக் லைஃப்’.

மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, த்ரிஷா, அபிராமி உள்ளிட்ட ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்த இந்தப் படம் வரும் ஜூன் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இப்படத்தின் முதல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், நேற்று திரிஷா நடனத்தில் ‘சுகர் பேபி’ என்ற 2-வது பாடல் வெளியானது.

இந்நிலையில் இயக்குநர் மணிரத்னம், இப்படத்தில் த்ரிஷாவின் கதாபாத்திரம் எப்படி இருக்கும் என்பது குறித்து பகிர்ந்துள்ளார்.

அதில், ” தக் லைப்” படத்தில் த்ரிஷாவின் கதாபாத்திரம் பொன்னியின் செல்வனுக்கு முற்றிலும் நேர்மாறாக இருக்கும். நான் அவரிடம் இந்த படத்தில் உங்களில் கதாபாத்திரம் குந்தவைக்கு நேர்மாறாக இருக்கும் என்று சொன்னேன், த்ரிஷாவும் அதற்கு ஒப்புக்கொண்டார்” என்று தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
articles2FZptg1riSYQjfA3FfaExT
சினிமாபொழுதுபோக்கு

ஜல்லிக்கட்டு பின்னணியில் கருப்பு பல்சர்: ஜனவரி 30-ல் திரைக்கு வருகிறது!

இயக்குநர் முரளி கிருஷ் இயக்கத்தில், நடிகர் தினேஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘கருப்பு பல்சர்’ திரைப்படம் எதிர்வரும்...

tn youth congress demands ban on sivakarthikeyan s parasakthi claims film deliberately distorts history 1768300414975 16 9
பொழுதுபோக்குசினிமா

பராசக்தி திரைப்படத்திற்குத் தடை கோரிக்கை: நடிகர் சிவகார்த்திகேயன் படத்திற்கு இளைஞர் காங்கிரஸ் கடும் எதிர்ப்பு!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில், 1960-களின் இந்தி எதிர்ப்புப் போராட்டக் களத்தைப் பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள ‘பராசக்தி’...

G i64DybQAEofcK
பொழுதுபோக்குசினிமா

பொங்கல் ரேஸிலிருந்து பின்வாங்கியது தெறி: மறுவெளியீடு ஒத்திவைக்கப்படுவதாகத் தயாரிப்பாளர் அறிவிப்பு!

நடிகர் விஜய் நடிப்பில் மாபெரும் வெற்றி பெற்ற “தெறி” திரைப்படத்தின் மறுவெளியீடு (Re-release) தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாகத்...

kamal 55 1
பொழுதுபோக்குசினிமா

உலக நாயகன் பெயரையோ, புகைப்படத்தையோ வணிக ரீதியாகப் பயன்படுத்தத் தடை: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி!

நடிகர் கமல்ஹாசனின் பெயர், புகைப்படம், பட்டங்கள் மற்றும் அவரது சினிமா வசனங்களை அவரது அனுமதியின்றி வணிக...