இந்தியாவில் நடைபெறும் மிக முக்கியமான திரைப்பட விழாக்களில் ஒன்றான இந்திய சர்வதேச திரைப்பட விழா (International Film Festival of India – IFFI), இந்த ஆண்டு கோவாவில் எதிர்வரும் நவம்பர் 20ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை நடைபெறுகிறது.
இந்த ஆண்டுத் திரைப்பட விழாவின் சிறப்பம்சமாக, தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் சினிமாவில் 50 ஆண்டுகளைக் கடந்துள்ளதைச் சிறப்பிக்கும் வகையில், அவருக்குச் சிறப்பு விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளார்.
இந்தத் திரைப்பட விழா உலகளாவிய திரைப்படங்களையும், உள்ளூர் திறமைகளையும் வெளிப்படுத்துகிறது.
திரையிடல்: இதில் பல்வேறு மொழிகளில் வெளியான திரைப்படங்கள் வெளியிடப்படவுள்ளன.

