சிவகார்த்திகேயனின் 21வது படத்தின் OTT இத்தனை கோடிக்கு விலைபோனதா?

tamilni 179

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் கலைஞர்களுக்கு ஒரு உதாரணமாக இருந்து வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன்.

எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் தனது திறமையால் தொலைக்காட்சியில் நுழைந்து கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி இப்போது தமிழ் சினிமாவின் முக்கிய நடிகராக வலம் வருகிறார்.

வரும் பொங்கல் ஸ்பெஷலாக நடிகர் சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் பெரிய எதிர்ப்பார்ப்பில் இருக்கும் அயலான் திரைப்படம் வெளியாக இருக்கிறது, இப்படம் கண்டிப்பாக குழந்தைகளை அதிகம் கவரும் என்கின்றனர்.

அடுத்து சிவகார்த்திகேயன் ராஜ் கமல் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனது 21வது படத்தில் நடிக்க இருக்கிறார். மே மாதம் தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடக்கிறது.

இந்த நிலையில் இந்த புதிய படத்தின் OTT வியாபாரம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. Netflix சிவகார்த்திகேயனின் 21வது படத்தை ரூ. 50 கோடி கொடுத்து வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

Exit mobile version