மாஸ் காட்டிய ரஜினிகாந்த்! அதிக லாபம் கொடுத்த திரைப்படம்

மாஸ் காட்டிய ரஜினிகாந்த்! அதிக லாபம் கொடுத்த திரைப்படம்

மாஸ் காட்டிய ரஜினிகாந்த்! அதிக லாபம் கொடுத்த திரைப்படம்

மாஸ் காட்டிய ரஜினிகாந்த்! அதிக லாபம் கொடுத்த திரைப்படம்

தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று சன் பிச்சர்ஸ். ரஜினி நடித்த எந்திரன் படத்தின் மூலம் திரையுலகில் காலடி எடுத்து வைத்த இந்த நிறுவனம் தற்போது விஜய், தனுஷ், சூர்யா, சிவகார்த்திகேயன் என பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களை தயாரித்து வருகிறது.

சன் பிச்சர்ஸ் தயாரிப்பில் சமீபத்தில் வெளிவந்து வசூலில் சாதனை படைத்து வரும் திரைப்படம் ஜெயிலர். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க நெல்சன் திலீப்குமார் இப்படத்தை இயக்கியிருந்தார்.

உலகளவில் இப்படம் இதுவரை ரூ. 395 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. மேலும் தமிழகத்தில் ரூ. 115 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

இந்நிலையில், ஜெயிலர் திரைப்படம் தான் சன் பிச்சர்ஸ் நிறுவனத்திற்கு அதிக லாபத்தை கொடுத்த படம் என தகவல் வெளியாகியுள்ளது.

இதுவரை சன் பிச்சர்ஸ் தயாரிப்பில் வெளிவந்த படங்களிலேயே ஜெயிலர் தான் அதிக லாபத்தை கொடுத்த முதலிடத்தில் உள்ளதாம். இதன்மூலம் சன் பிச்சர்ஸ் நிறுவனத்தின் ப்ளாக் பஸ்டர் திரைப்படமாக ஜெயிலர் கருதப்படுகிறது.

Exit mobile version