சினிமா

என்னை எனக்கே புதிதாய் காட்டிய படம்.. ஓபனாக பேசிய நடிகர் ஜெயம் ரவி

Published

on

ஜெயம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகி கலக்கிவரும் நடிகர் ரவி.

முதல் படம் வெற்றி கொடுக்க ஜெயம் ரவி என்று தனது பெயரை மாற்றியிருந்தார்.

அப்படம் கொடுத்த வெற்றி அடுத்து எம்.குமரன் S/o மகாலட்சுமி, மழை, உனக்கும் எனக்கும், தீபாவளி, சந்தோஷ சுப்பிரமணியம், பேராண்மை, தில்லாலங்கடி, எங்கேயும் காதல், ரோமியோ ஜுலியட், தனி ஒருவன், அடங்க மறு, மிருதன், கோமாளி, பொன்னியின் செல்வன் என தொடர்ந்து நிறைய வெற்றிப் படங்களை கொடுத்து வந்தார்.

கடைசியாக இவரது நடிப்பில் பிரதர் படம் வெளியானது ஆனால் சரியாக படம் ஓடவில்லை.

சமீபத்தில் ஜெயம் ரவி தனது சினிமா பயணத்தின் பேவரெட் படம் எது என கூறியுள்ளார்.

அதில் அவர், என்னுடைய சினிமா பயணத்தில் பேராண்மை படம் மிகவும் சிறப்பானது. என்னை எனக்கே புதிதாய் காட்டிய படம் என்றால் பேராண்மை தான்.

நம்மால் இதைச் செய்ய முடியும்; சினிமாவில் இன்னும் நான் சாதிக்க வேண்டியது அதிகம் என்று உணர்த்தியதும் இப்படம் தான்.

இப்படத்தின் இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன் சார் தற்போது நம்முடன் இல்லையென்றாலும், பேராண்மை படத்தின் மூலமாக இன்னும் நம்மோடு வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார் என கூறியுள்ளார்.

Exit mobile version