சினிமா
அல்லு அர்ஜுனுக்கு ஜாமீன் வழங்கிய உயர் நீதிமன்றம்.. கைதாகி சில மணி நேரத்தில் இடைக்கால ஜாமீன்
அல்லு அர்ஜுனுக்கு ஜாமீன் வழங்கிய உயர் நீதிமன்றம்.. கைதாகி சில மணி நேரத்தில் இடைக்கால ஜாமீன்
புஷ்பா 2 படத்தின் ப்ரீமியர் காட்சி திரையிடப்பட்ட தியேட்டருக்கு அல்லு அர்ஜுன் வந்தபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஒரு பெண் உயிரிழந்த வழக்கில் தற்போது போலீசார் நடிகர் அல்லு அர்ஜுனை கைது செய்து இருக்கின்றனர்.
அல்லு அர்ஜுன் வீட்டுக்கு வந்த போலீசார் அவரை கைது செய்து அழைத்து சென்றனர். விசாரணைக்கு பிறகு அல்லு அர்ஜுன் மருத்துமனைக்கு அழைத்து செல்லப்பட்டு உடல்நிலை பரிசோதிக்கப்பட்டது
போலீசார் அதன் பின் அல்லு அர்ஜுனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அல்லு அர்ஜுனுக்கு கீழ் நீதிமன்றம் 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து இருக்கிறது.
இருப்பினும் தற்போது உயர்நீதிமன்றம் அல்லு அர்ஜுனுக்கு ஜாமீன் வழங்கி இருக்கிறது. அதனால் அவர் சிறைக்கு அனுப்பப்படாமல் ரிலீஸ் ஆக இருக்கிறார்.