சினிமா

10 நாட்களில் சொர்க்கவாசல் திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா..

Published

on

நகைச்சுவையில் தனக்கென்று தனி இடத்தை ரசிகர்கள் மனதில் பிடித்திருப்பவர் ஆர்.ஜே. பாலாஜி. ஆனால், நகைச்சுவையை மொத்தமாக தவிர்த்து, வித்தியாசமான கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்த படம் சொர்க்கவாசல்.

இயக்குனர் சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில் உருவான இப்படத்தில் பாலாஜியுடன் இணைந்து கருணாஸ், நட்டி நட்ராஜ், செல்வராகவன், சானியா அய்யப்பன் ஆகியோர் நடித்திருந்தனர்.

உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. புஷ்பா 2 திரைப்படம் வெளிவந்த நிலையிலும், சொர்க்கவாசல் படம் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், சொர்க்கவாசல் திரைப்படம் உலகளவில் 10 நாட்களில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் இதுவரை ரூ. 6.5 கோடி வசூல் செய்துள்ளது.

Exit mobile version