சினிமா

சென்சேஷனல் இளம் நடிகையுடன் பிக் பாஸ் சௌந்தர்யா எடுத்த புகைப்படம்.. இதோ பாருங்க

Published

on

பிக் பாஸ் 8ல் டாப் போட்டியாளர்களில் ஒருவராக இருக்கிறார் சௌந்தர்யா. கடந்த வாரம் விஜய் சேதுபதி சௌந்தர்யாவை வறுத்தெடுத்திருத்தை நாம் பார்த்தோம். அதனால் மனமுடைந்துபோன இவர் கண்கலங்கி அழுதார்.

மேலும் கோவா கேங்-கையும் வெச்சு செய்தார் விஜய் சேதுபதி. இவர்களுடைய கேங் ஆடும் ஆட்டம் மொத்த பிக் பாஸ் வீட்டின் விளையாட்டையும் பாதிக்கிறது என எச்சரித்து கூறினார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகியுள்ள சௌந்தர்யா, இந்த நிகழ்ச்சிக்கு முன் சில வெப் தொடர்களில் நடித்து வந்தார் என்பதை நாம் அறிவோம். அதே போல் திரைப்படங்களில் சிறு கதாபாத்திரங்களையும் ஏற்று நடித்துள்ளார்.

இந்த நிலையில், இளம் சென்சேஷனல் நடிகையான ஸ்ரீலீலாவுடன் சௌந்தர்யா எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடனத்தின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் ஸ்ரீலீலா. சமீபத்தில் வெளிவந்த புஷ்பா 2 படத்திலும் ஒரே ஒரு பாடலுக்கு நடமாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Exit mobile version